கணவன் மனைவி பிரட்சனை தீர்க்க பணம் கேட்டு தாக்கியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கைது

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 07.03.2020 இன்று கணவன் மனைவி பிரச்சனையில், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கிதர்பிஸ்மி கைது. தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு பகுதியை சேர்ந்த நாசர் மகன் சுலைமான்சேட் (வயது 35). இவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கிதர்பிஸ்மி, கணவன் மனைவி பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்து வைத்தாராம். இதற்காக சுலைமான்சேட் எனபவரை ரூபாய் 30 இலட்சம் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகி கிதர்பிஸ்மி மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினாராம்.

இதில் காயம்பட்ட சுலைமான்சேட் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கிதர்பிஸ்மி-யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, விழுப்புரம் SP விருது

38 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மெச்சதகு விருது மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி அலுவலகத்தில் நடந்தது. காவல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami