Read Time1 Minute, 9 Second
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அப்பு (எ)கலையரசன் (25), அசார் (எ)இமாம் ஒலி (30) என்பவர்கள் மீது நகர மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கொலை வழக்கு, திருட்டு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் MSc Agri அவர்கள் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை IAS அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் மேற்கண்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்