பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு திண்டுக்கல் காவல்துறையினர் வலைவீச்சு

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா R கோம்பையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் செந்தில்(51) ஆசிரியரை திண்டுக்கல் மாவட்ட குழந்தை நல வாரிய அதிகாரிகளிடம் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடப்பதாக மாணவ மாணவியர்கள் தொலைபேசி மூலமாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தை நல வாரிய அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை செய்ததில் செந்தில் ஆசிரியர் மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் மாவட்ட குழந்தை நல வாரிய அதிகாரிகள் எரியோடு  போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற எரியோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள செந்தில் ஆசிரியரை தேடி வருகின்றனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு காவல்துறை சார்பில் மறுவாழ்வு முகாம்

42 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட வளாகத்தில் இன்று 16.3.20 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் பயிற்சி 3 மாதங்களுக்கு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami