போக்குவரத்து தலைமைக் காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல், K-3 அமைந்தகரை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் J.மோகன்குமார் (த.கா.21224) என்பவர் கடந்த 14.3.2020 அன்று இரவு நடுவங்கரை சந்திப்பு சிக்னலில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்தபோது, இரவு சுமார் 08.00 மணியளவில் சிக்னல் அருகில் பொட்டலம் இருந்ததுள்ளது. அதை தலைமைக்காவலர் எடுத்து பார்த்தபோது, அதில் 1 ஜோடி கம்மல் மற்றும் சிறிய சங்கிலி ஆகிய தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. போக்குவரத்து பணி முடியும் வரை யாரும் தங்க நகையை தேடி வராததால், போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, மேற்படி சுமார் 2 சவரன் தங்க நகைகளை K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, விவரங்களை கூறி மனு எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

பணியின்போது, சாலையில் கிடந்த தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த K-3 அமைந்தகரை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் J.மோகன்குமார் (த.கா.21224) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (16.03.2020) அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கும்பகோணம் கீழக் கொட்டையூரில் கடைபூட்டை உடைத்து கொள்ளை

102 தஞ்சை;  கும்பகோணம் அருகிலுள்ள கீழக் கொட்டையூர் மெயின் ரோட்டில் விமல் என்பவர் அலமேலு ஆயில் மில்ஸ் என்ற பெயரில் சமையல் எண்ணை கடை வைத்து நடத்தி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami