Read Time1 Minute, 0 Second
மதுரை: கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஶ்ரீமதி என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அவசர உதவிக்கு வாகன வசதி கிடைக்கவில்லை. தகவல் அறிந்த தெப்பக்குளம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தங்கள் சொந்த செலவில் வாகன வசதி செய்து கொடுத்தனர். காவலர்களின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்