Read Time1 Minute, 15 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் கபசுரக் குடிநீரானது அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஆயுதப்படை ஆய்வாளர் அவர்கள் காவலர்களிடம் நாம் வெளியில் சென்று வந்தால் கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என செய்முறை விளக்கமளித்தும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.