சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin
0 0
Read Time2 Minute, 55 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 07.4.2020 அன்று காவல் ஆளிநர்களுக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், இன்று (07.4.2020) காலை பெரியமேடு, ரிப்பன் மாளிகை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் (Face Mask) மற்றும் திரவ சுத்திகரிப்பான் (Liquid Hand Sanitizer) வழங்கினார். மேலும், ஆரண்யா பவுன்டேஷனின் தன்னார்வலர் திரு.அருணவ் ரத்தோர், திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., (காவல்துறை கூடுதல் இயக்குநர், சீருடை பணியாளர் தேர்வாணையம்) என்பவர் அவரது பவுண்டேஷன் சார்பில் சென்னை பெருநகர காவல்துறைக்கு சுமார் 35,000 லிட்டர் அளவு கொண்ட பழச்சாறு (Fruit Juice) பாக்கெட்டுகளை வழங்கினார்.

பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சீருடை பணியாளர் தேர்வாணையம்) திரு.சந்தீப் ராய் ரத்தோர்,இ.கா.ப., சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., (தலைமையிடம்) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.ஆர்.சுதாகர்,இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., (தலைமையிடம்), காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்

சென்னை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 1483 பேர் கைது

142 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 09.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami