Read Time56 Second
திருப்பூர்: திருப்பூர், நரியம்பள்ளி புதூர் பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். டீ மாஸ்டர் ஆன இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல் உணவின்றி தவிர்த்துள்ளார். இதனை அறிந்த அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்கள் இவர் குடும்பத்திற்கு தேவையான 10 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட இவர் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்