Read Time55 Second
மதுரை : மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூமேக்கர் காலனி, ஆர்,ஆர் மண்டபம் மற்றும் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 80 குடும்பங்களை தன்னார்வலர்கள் உதவியுடன் மதிச்சியம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்கள் கண்டறிந்து மதிச்சியம் காவல் நிலைய காவலர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தை தத்தெடுத்து இன்று 18.04.2020 ம் தேதி அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள்.