Read Time1 Minute, 15 Second
அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தினால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வெளிமாநிலத்தவர்கள் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வகையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி 22/04/2020 அன்று கயரலாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள், மருத்துவ குழுவின் ஒத்துழைப்புடன் வெப்பநிலையை அறியும் Thermal Scanner வைத்து நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் மருத்துவ குழுவின் உதவியுடனும் காவலர்களுக்கும் பொது மக்களுக்கும் Thermal Scanner மூலம் உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.