Read Time1 Minute, 11 Second
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி.IPS., அவர்களின் உத்தரவுபடி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் கிராமத்தில் நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வேட்டவலம் காவல் ஆய்வாளர் திருமதி.P.மகாலட்சுமி மற்றும் டெல்டா தனிப்பிரிவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 பிளாஸ்டிக் பேரல், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரிய மண்பானை என மொத்தம் 950 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது.