அரக்கோணம் DSP மற்றும் ஆய்வாளர் தலைமையில் 250 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

Admin
Read Time1 Minute, 57 Second

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம்   அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் அரக்கோணம் கும்மினி பேட்டை பகுதியை சேர்ந்த சுமார் 250 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

அரக்கோணம் ஜெயின் சங்கமும், போலீஸ் நியூஸ் பிளஸ் ராணிப்பேட்டை மாவட்ட நிருபரும், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்களும்,  இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து ஊடரங்கு பிறப்பித்த நாள் முதல் தேனீக்கள் போல சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களை கொரானாவிலிருந்து பாதுகாக்க தன்னார்வலர்கள் குழுவை அமைத்து, இரவு பகல் பாராமல் அவர்களுக்கு உணவு அளித்து சிறப்பான பாதுகாப்பு பணியினை செய்து வருகின்றனர். அவர்கள் இருவரின் அணுகுமுறை அரக்கோணம் பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லிக்குப்பம் பகுதி மக்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்களின் முக்கிய அறிவிப்பு

125 கடலூர்: கொரோனோ வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தமிழக அரசு சமூக இடைவெளி விட்டு கடைகளில் பொருட்கள் வாங்கசொல்லி எவ்வளவு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami