Read Time1 Minute, 6 Second
மதுரை : மதுரை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநகர்களுக்கு வழங்கும்படி மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங்க் மாத்திரைகள் (zinc tablets), மல்டி வைட்டமின் மாத்திரைகள் (multivitamin tablets), கப சுர குடிநீர் சூரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் மற்றும் கிருமிநாசினிகள் சுத்திகரிப்பான் போன்றவற்றை சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்களிடம் வழங்கி அனைவருக்கும் உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்