Read Time1 Minute, 8 Second
தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.இசக்கிராஜா அவர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி 2000 கிலோ, 500கிலோ காய்கறிகள் மளிகை பொருட்கள்,கபசுர குடிநீர், மற்றும் மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக திகழுகின்றார். காவல் உதவி ஆய்வாளர் திரு.இசக்கிராஜா அப்பகுதியில் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ஆனால் பொதுமக்களுக்கு அரவணைக்கும் தாயாக திகழ்கின்றார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.