191
Read Time2 Minute, 7 Second
சென்னை : கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளை
கண்காணிக்கும் திரு. முத்தமிழ் IAS அவர்களின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு இன்று 01.05.2020, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு வருகைபுரிந்து, ஆணையரகத்தின் வெளிப்புறம் கிருமி நாசினி தெளிக்கும் “வருண் கிருமி நாசினி தெளிப்பான்” வாகனம், மற்றும் ஆணையரகத்தின் பல்வேறு அலுவலக அறைகளை பார்வையிட்டனர்.
சென்னை பெருநகர காவலின் ஆயுதப்படை பிரிவு காவலர் குழுக்களால் தயாரிக்க
ப்பட்ட Hand Sanitizer, முககவசங்கள், துணி கையுறைகள், ஆகியவற்றையும், காவல் ஆணையரகத்தின் மேற்கு நுழைவாயிலில் குளோரோசால்ட், தண்ணீர் கலந்த, ஆயுதப்படை காவலர்களால் தயாரிக்கப்பட்ட, கிருமி நாசினி அனைத்து அலுவலக அறைகளின் தரைப்பகுதியில் தெளிக்கப்படுவதை பார்வையிட்டனர்.
மேலும் கோரோனா கட்டுப்பாட்டறையைப் பார்வையிட்டு, செயல்படும் விதம், கொரோனா தொற்று பாதித்தவர்களிடம் அவர்களின் விபரம் அறியும் முறை, மற்றும் நோய்தொற்று தொடர்பு சம்மந்தமான தகவல் சேகரிப்பு போன்ற பணிகளை ஆய்வுசெய்தனர்.
அலுவலக நுழைவு வாயில்களின் வழியாக வருபவர்கள் Sanitizer உபயோகிப்பதையும், Hand Sanitizer வைத்திருப்பதையும் கண்டு தங்களது பாராட்டுதல்களை சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் தெரிவித்துவிட்டு காவல் ஆணையரிடம் ஆலோசனையில் ஈடுபட்டு, ஆய்வை முடித்து பின் புறப்பட்டு சென்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்
சென்னை
Happy
0
0 %
Sad
0
0 %
Excited
0
0 %
Sleppy
0
0 %
Angry
0
0 %
Surprise
0
0 %