போதை மாத்திரைகளையும், டானிக்கையையும் விற்பனை செய்த மருந்தகம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time2 Minute, 10 Second

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் போதை மாத்திரைகளை வாங்கி விழுங்கிய சதாம் உசைன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையை தொடங்கிய தொண்டி போலீசார், அந்த மருந்தகத்தை நோட்டமிட்டனர். காவல் சார்பு ஆய்வாளர், அரசு மருத்துவர் தலைமையில் தீவிரமாக மருந்தகம் கண்காணிக்கப்பட்டது.   

அப்போது தொண்டியைச் சேர்ந்த முகமது சியாத், முகமது பயாஸ் ஆகிய இருவர் அதிக வீரியம் கொண்ட தூக்க மாத்திரைகளை போதைக்காக வாங்கியுள்ளனர். அதேபோல், போதை மிகுந்த டானிக் பாட்டில்களையும் வாங்கியுள்ளனர். ஒரு பாட்டில் ரூ.150 வீதம் 55 பாட்டில்களை மொத்தமாக வாங்கியுள்ளனர். மருத்துவரின் பரிந்துரை ஏதும் இல்லாமல் போதைக்காகவே இவை வாங்கப்படுவதை உறுதி செய்த போலீசார், வாலிபர்கள் இரண்டு பேரையும், மருந்தக உரிமையாளர் மகன் ஒருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது சியாத்திடம் இருந்து 250 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போதை மாத்திரைகளை விழுங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சதாம் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்

256 மதுரை: மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami