போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக FOP உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

Admin
0 0
Read Time2 Minute, 9 Second

மதுரை : கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால், காவல் துறையினர் அல்லும் பகலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த எண்ணற்ற உறுப்பினர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சேவையை ஊக்குவிக்கும் விதமாக போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, மதுரை மாவட்ட குடியுரிமை நிருபர்கள் திரு.T.C.குமரன் மற்றும் திரு.T.N.ஹரிகரன் ஆகியோர் மதுரை மாநகரில் பணியாற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மதுரை பி3 தெப்பகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு சு.கணேசன் அவர்களின் தலைமையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நமது நிருபர்களும் சார்பு ஆய்வாளர்கள் திரு. சிவ ராமகிருஷ்ணன், திரு. ஜெயக்குமார் நுண்ணறிவுபிரிவு தலைமை காவலர் திரு. அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்த தேனி போலீசார்

331 தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami