கும்பகோணத்தில் ATM உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்த குற்றவாளி சில மணி நேரத்தில் கைது

Admin
0 0
Read Time2 Minute, 39 Second

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட் கோட்டம் பாணதுறை திருமஞ்சன வீதியிலுள்ள ஒரு தனியார் ATM மையத்தில் நெற்று (14-5-2020) யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் ATM உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில் கிழக்கு காவல்துறை போலீஸார் அங்கு நேரில் சென்று விசாரனை மேற் கொண்டார்கள் இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவு படி கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், கிழக்கு காவல்துறை ஆய்வாளர் திரு .ரமேஷ் குமார் மற்றும் கும்பகோணம் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜ ,செல்வகுமார் ஊர்காவல்படையினார்.திரு . கதிஷ் ,ஜம்புலிங்கம் ,ரமேஷ், சண்முகம் ,சிவசங்கர் ,சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தனிப்படையினர் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்ல்களை சேகரித்தும் CCTV பதிவுகளில் கிடைத்த அடையாளங்களின் அடிப்படையிலும் கும்பகோணம் பானாதுரை பகுதியை சேர்ந்த வசீகரன் (18) என்பவரை பிடித்து விசாரித்ததில் தான் இன்று காலை ATM மையத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததை ஒப்புக் கொண்டார்.

அதன் பின் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்ற எட்டு மணி எட்டு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படையினரை தஞ்சைமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டி சிறப்பித்தார்.

 

நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

130 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 25 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami