Read Time6 Minute, 11 Second
பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. இதனால் நாளடைவில் எலும்புகள் தேய்மானம், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர். பின்னாளில் இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம்.
-
குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனை (mobile phone) பயன்படுத்துவதால் செல்போன் கதிரியக்கமானது அவர்களை பாதிக்கிறது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள் குழந்தைகளை எளிதில் தாக்கும். இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
-
ஒரே இடத்தில் அமர்ந்து எப்போதும் செல்போனை உபயோகித்து கொண்டிருப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறை குழந்தைகள் பலர் உடல் பருமன் பிரச்சனைகளால் அவதிப்படுவதை நான் அன்றாடம் காண முடிகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும், உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.
-
செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட்டு சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது.
-
செல்போனுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் எனபதால் கவனம் தேவை.
தவிர்க்கும் முறைகள்
-
உங்களது மொபைலை (mobile phone) குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம். அவர்களுக்கு செல்போன்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போதிய விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.
-
மற்றவர்களுடன் அன்புடன் பழக நற்பண்புகளை கற்றுக்கொடுங்கள். நல்ல / தீய செய்திகளை எடுத்துக்காட்டுடன் எடுத்துரைக்கவும்.
-
இயற்கையோடு வாழ பழக்கப்படுத்துங்கள். அவர்களது செயல்பாடுகளை அட்டவனைபடுத்தப் பழக்குங்கள்.
-
வீட்டில் உள்ள பணிகளில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுங்கள். வீட்டில் செல்போனில் கடவுச் சொற்களை உருவாக்குங்கள்.
-
குழந்தைகளுடன் நேரங்களை செலவிடுங்கள்.கூர்நோக்கு / நினைவுத்திறன் அதிகரிக்கும் விளையாட்டு / பாரம்பரிய விளையாட்டுக்களை கற்றுக்கொடுங்கள்.
-
ஒரே நாளில் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் பழக்கத்தை மாற்ற முடியாது. முதலில் குழந்தைகள் முன் பெரியவர்களாகிய நாம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அவர்களுக்கு பயன்படுத்த கொடுக்கும் நேரத்தை குறைக்கவும் தொடர்ந்து பயன்படுத்தாமல் இடைவெளி விட்டு பயன்படுத்த செய்யுங்கள்.
-
வீட்டுக்கு வெளியே போய் விளையாடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாடினால் அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
-
குழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா,என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.
-
குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.
-
பெற்றோர்கள் தங்கள் கையில் செல்போனை வைத்து கொண்டு குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்.
மொபைல் (mobile phone) போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க மேலே கூறியுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பாக இருங்கள்.