வேலூரில் தொடரும் சாராய வேட்டை, தெறித்து ஓடும் சாராய வியாபாரிகள்

Admin
Read Time2 Minute, 28 Second

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரிவு ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் வேலூர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று(20.05.2020) நடத்திய மதுவிலக்கு வேட்டையில் சின்னபுதூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வி(37)  என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், வேப்பங்குப்பம், அணைக்கட்டு தாலுகா,வரதலம்பட்டு கிராமத்தில் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் விக்ரம்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 60லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பிளஸ் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.

400லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி இன்று குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் குடியாத்தம் கோட்டுச்சேரி கிராமத்தில் உள்ள சத்கர் மலைப்பகுதியில் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் பால்சோனாய் பகுதியில் சுமார் 400லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

207 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் சட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami