சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்கு பாராட்டு

Admin
Read Time1 Minute, 26 Second
மதுரை : மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் முகேஷ் குமார் என்பவர் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த ரூ.40,000/- பணத்தை தவிரவிட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணம் தொலைந்த 15 நிமிடத்தில் பணத்தை பறிகொடுத்தவரை கண்டுபிடித்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் முன்னிலையில் உரிய விசாரணை செய்து பணத்தை ஒப்படைத்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் விக்னேஷ்வரன் என்பவரின் நற்செயலை பாராட்டினார். பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெளிமாநிலத்தில் இருந்து மதுரை மாநகருக்கு நுழைய புதிய கட்டுப்பாடு, காவல் ஆணையர் அறிவிப்பு

169 மதுரை : மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்தோ அல்லது வெளி மாவட்டங்களிலிருந்தோ புதிதாக உரிய அனுமதியின்றி யாரேனும் வர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami