Read Time2 Minute, 40 Second
மேலும் 1500 தமிழர்களுக்கு வழங்குகின்ற உணவிற்கான பணத்தினை அனுப்புவதாகவும் தெரிவித்தார். இத்தகவலை அனந்தப்பூர் மாவட்ட குண்டக்கல் SP, ஆந்திர மாநில DGP திரு.தாமோதர் கவுதம் சவாங் இ.கா.ப., அவர்களிடம் தெரிவித்தார். தகவலறிந்த DGP அவர்கள் மேற்படி உணவில்லாமல் இரயிலில் பயணம் செய்யும் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இது, அதனால் நாமே உணவினை நம் சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்ததோடு, 1500 தமிழ் பயணிகளுக்கும் பிரியாணி, சீரக அரிசி மற்றும் கலவை சாதங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பன்கள் மற்றும் 1500 மினரல் வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை இன்று மதியம் 03.00 மணிக்கு வழங்கினார். உணவுகளை பெற்றுக் கொண்ட பயணிகள் மிகவும், மகிழ்ச்சியடைந்தனர். சென்னை காவல் ஆணையாளர் அவர்களுக்கும், அனந்தபூர் மாவட்ட குண்டக்கல் SP, ஆந்திர மாநில DGP மற்றும் பூமிகா டிரஸ்டுக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
