141
Read Time50 Second
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பெயரில் திரு.பழனி, துணை காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அவர்கள் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கலம் கிராமத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் தேவையறிந்து நிவாரண பொருட்களை வழங்கியும், கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். அரும்பாவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி சித்ரா உடனிருந்தார்.