சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு, மாவட்ட SP திரு.அருண் பாலகோபாலன் அவர்கள் நேரில் அஞ்சலி

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் SSI திரு.ராமசந்திரன் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திரு.ராமச்சந்திரன் (50). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த ராமச்சந்திரனை உடன் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .அருண் பாலகோபாலன் IPS அவர்கள் சிறப்பு காவல் உதவியாளர் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது

கோவை அருகே போத்தனூர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami