கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

Admin
0 0
Read Time2 Minute, 29 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் u/s 8(c) 20(b) (ii) (E) NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், முகமது நசீர் உட்பட ஆறு நபர்களை SI திரு.வசந்த குமார் அவர்கள் U/s 12 of TNG Act-ன் கீழ் கைது செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய பிரபு என்பவரை SI திரு.நாகநாதன் அவர்கள் u/s 21(4) of Mines & Minerals regulation Act -ன் கீழ் கைது செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகேயுள்ள நெருஞ்சி பட்டி பகுதியில் கோவிலாங்குளம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சண்முகநாதன் என்பவரை ஆய்வாளர் திருமதி.ஜான்சிராணி அவர்கள் U/S NDPS Act, Arms act & Explosive Substances Act-ன் கீழ் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும், அவரிடமிருந்து வாள்-1, நாட்டு வெடிகுண்டு-05, கஞ்சா-1.750 Kg ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி பகுதியில் மேரி என்ற மூதாட்டியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த யாக்கோபு என்பவரை ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் u/s 387 IPC-ன் கீழ் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்

181 திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வடுவூர் சரக பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க செல்லம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நள்ளிரவில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami