அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்போது 5 வது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் பாதுகாப்பு கருதியும், அவர்களின் குடும்ப பாதுகாப்பு மற்றும் நலன் கருதியும் காவல்துறையினரை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் அரியலூர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினருக்கும், ஆயுதப்படை காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 800/- ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பாதுகாப்பு உபகரணங்கள் MASK, SANITIZER, Hand Gloves மற்றும் SOAP போன்ற பொருட்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் 06/06/2020 அன்று வழங்கப்பட்டது.
காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணம் அளித்த காவல் கண்காணிப்பாளர்

Read Time1 Minute, 16 Second