66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

Admin
0 0
Read Time2 Minute, 18 Second

மதுரை : மதுரை மாநகரில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 66 வயதுள்ள ரெங்கசாமி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரை பெற்று ரெங்கசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

பெற்றோர்கள் அனைவருக்கும் மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.. உங்களது குழந்தைகளை நீங்கள் அதிகமாக நேசித்தால் மட்டும் போதாது. அந்நிய நபர்கள் யாரையும் எளிதில் நம்பி உங்களது வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். உங்களது குழந்தையை உங்கள் கண் பார்வையிலேயே பாதுகாப்பாக வைத்திருங்கள்.. குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளி இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு GOOD TOUCH மற்றும் BAD TOUCH பற்றி சொல்லிக்கொடுங்கள். குழந்தைகளை விளையாட வெளியே அனுப்பும்போது தனியாக அனுப்பாதீர்கள். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு அவர்களை துன்புறுத்தும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்… பெண் குழந்தைகளை துன்புறுத்துவதாக யாருக்காவது தகவல் கிடைத்தால் உடனடியாக1098 மற்றும் மதுரை மாநகர WHATSAPP முறையீட்டு எண்ணிற்கு 83000-21100 தகவல் தெரிவியுங்கள்.
 
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய குடும்பத் தலைவர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ்(67) இவர் ஒரு கட்டிட தொழிலாளி இவரது மனைவி விஜயலட்சுமி வயது 56 இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் குடும்ப […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami