ஆதரவின்றி நிற்கதியாய் நின்ற பிள்ளைகளுக்கு உதவிய வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளரின் மனிதநேய செயல்

Admin
0 0
Read Time1 Minute, 51 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி நிற்கதியாய் நிற்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ” நீளுமா உதவிக்கரம் ” என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

வெளியான, அரைமணிநேரத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள் அந்த பெண் பிள்ளைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், மாஸ்க் சானிடைசர் ஆகியவற்றை வழங்கியதோடு வீட்டு செலவிற்காக ரூ.5,000/- ஆகியவற்றை வழங்கி மேலும் அந்த பிள்ளைகளின் கல்விக்கு குருகுலம் பள்ளி மற்றும் வித்யாலயா பள்ளிகளில் கல்வி பயில ஏற்பாடுகளும் செய்து ஆறுதல் கூறியுள்ளார்.

தகுந்த நேரத்தில் உதவி செய்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களை காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மரணமடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

521 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் திரு.மணிகண்டன் அவர்கள் பீகார்-நேபாள எல்லையில் பணியில் இருந்த போது மாடு கடத்தல்காரர்களால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami