நாமக்கல் கிருஷ்ணகிரியில் 8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.

Admin

சேலம் : கிருஷ்ணகிரி நாமக்கல்லில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. சிவலிங்கம், போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய காவல் ஆய்வாளர் திரு.கமலேசன், ராயக்கோட்டை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் பாகலூர் காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் ஊத்தாங்கரைக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் திரு.பழனிச்சாமி பாகலூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் திருமதி. தீபா, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவிற்கும், அங்கு பணியாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி, புதுசத்திரம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுசத்திரம் காவல் ஆய்வாளர் திரு.கணேசன் மோகனூருக்கும், அங்கு பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் திரு.சுகுமார், சேத்தமங்கலம் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி திரு. பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரானா

304 சென்னை : சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அதன்படி  20 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது. இவர்களை சுகாதாரத் துறை […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452