சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டி வெகுமதி அளித்த காஞ்சிபுரம் SP

Admin

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்கள். திருப்பெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரகடம் சந்திப்பு அருகே 06.06.20 அன்று அதிகாலை மகாதேவி மொபைல் ஷாப்பினை உடைத்து திருட முற்பட்ட குற்றவாளி சிவசங்கர் (எ) சங்கர் என்பவரை அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட திரு.ஏழமலை உதவி ஆய்வாளர், திரு.மஸ்தான் சிறப்பு உதவி ஆய்வாளர், திரு.சீனிவாசன் தலைமை காவலர், காவல் நண்பர்கள் திரு.கவாஸ்கர், திரு.அஜித்குமார் மற்றும் திரு.ஷியாம் ஆகியோர் திறமையாக செயல்பட்டு மேற்படி எதிரியை பிடித்தமைக்காகவும், காஞ்சிபுரம் உட்கோட்டம், வாலாஜாபாத் காவல் நிலைய போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரிகளை விரைவாக கண்டுபிடித்து கைது
செய்த திரு.வெங்கடேசன் உதவி ஆய்வாளர் மற்றும் திரு.தவமணி தலைமை காவலர் ஆகியோர்களையும், காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளை பிடித்தமைக்காக தனிப்பிரிவில் பணிபுரியும் திரு.சோமசுந்தரம் தலைமை காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்திற்கு அழைத்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டி வெகுமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்

156 மதுரை : திருநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி திருமதி.தனலட்சுமி என்பவர் திருநகர் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றபோது தவறவிட்ட ரூபாய் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452