திருவண்ணாமலையில் 44 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

Admin

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுக்கா, நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் பாரதிராஜா, வயது 29 என்பவர் பலமுறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த வரை போளூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட நபரின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி IAS., அவர்கள் பாரதிராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 44 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தானியங்கி கை சுத்திகரிப்பான்

246 மதுரை :  “CORONA VIRUS” பரவாமல் தடுப்பதற்காக தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நன்கொடையாக UNO AQUA நிறுவனத்தை சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452