வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 44 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அப்பெண் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள் தலைமையில் SI திரு.சரவணகுமார், திரு.கணேசன், தலைமை காவலர் திரு.சீனிவாசன், திரு.ஞானவேல், முதல்நிலை காவலர் திரு.வேளாங்கண்ணி, திரு.முத்துசாமி, திரு.மாரீஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து திண்டுக்கல்-பழநி சாலையில் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோத்குமார் (25), வெள்ளையன் ராஜா (27), குருவி சரவணன் (34) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.  

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய துணை காவல் கண்காணிப்பாளர்

209 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami