கோவையில் முழு ஊரடங்கு அமலாகுமா?- ஆட்சியர் ராஜாமணி பதில்

Admin

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது, வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மற்றும் ரெயில்கள் மூலம் கோவை மாவட்டத்திற்குள் பலர் வருகிறார்கள். அப்படி வருபவர்கள் முறையான அனுமதி பெற்று மட்டுமே வர வேண்டும். அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியே வரக்கூடாது. கோவை மாவட்டத்திற்கு அனுமதி இல்லாமல் வந்திருப்பவர்கள் விவரங்கள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் வெளியே வர அனுமதியில்லை. மீறி வரும் நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால் இந்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் கோவை மாவட்டம் தொற்று இல்லாத அளவிற்கு மாற்றப்படும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது. அதை சரியாக கடைபிடித்தாலே போதுமானது. மற்ற மாவட்டங்களை போல இங்கு முழு ஊரடங்கு அவசியமில்லை. கொரோனா வைரஸ் தொற்று பரவா மல் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பாஸ்கரன் (மையம்), சரவணன் (வடக்கு), சிவகுருநாதன் (தெற்கு), குமரவேல்(மேற்கு) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  


நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்... வீட்டில் இருங்கள்..." மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்

405 மதுரை : விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்… வீட்டில் இருங்கள்…முக கவசம் அணியுங்கள்… தேவை இல்லாமல் வெளி இடங்களில் சுற்றாதீர்கள்…கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாதீர்கள்…உங்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452