இராமநாதபுரம் கிரைம்ஸ்

Admin
Read Time2 Minute, 45 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள தாழைத்தோப்பு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக, தனது மகளின் கணவர் சபரிநாதன் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட முனியராஜ் மற்றும் காளீஸ்வரன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்கள் U/s 147,148, 294(b),109,120 (b) ,307 IPC-ன் கீழ் கைது செய்தார்.


செல்போன் கடையில் திருடியவர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் அருகேயுள்ள பாசிபட்டினம் பகுதியில் 25.06.2020-ம் தேதி நிமத்நிஷா என்பவரின் வீட்டிற்குள்  நுழைந்து அவரது செல்போனை திருடிச் சென்ற ராவுத்தர், தாரிக் உட்பட மூவரை SI திரு.முருகானந்தம் அவர்கள் U/s 457, 380 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இராமநாதபுரம் பாரதி நகரில்  24.06.2020 சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையை உடைத்து அதிலிருந்து செல்போன்களை திருடிச் சென்ற தங்கபாண்டி என்பவரை SI திரு.ஜனகன் அவர்கள் U/s 457,380 IPC -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.


அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள தரைக்குடி ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய சரவணன் என்பவரை SSI திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள் U/s 294(b) ,379 ,353 IPC and 21(1) Mines & Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.


சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்கள் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ், வடிவேலு, மாயகிருஷ்ணன் மற்றும் ராஜா ஆகிய நால்வரையும் SI திரு.பிரகாஷ் அவர்கள் U/s 12 TNG Act-ன் கீழ் கைது செய்தார்.  


நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரோந்து கண்காணிப்பு அமைப்பு (Beat Monitoring System- BMS) என்ற செயலி அறிமுகம்

192 இராணிப்பேட்டை : கடந்த 28.11.2019 ம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நிர்வாக காரணங்களுக்காக துவங்கப்பட்டது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami