வேலை வேண்டுவோர், வேலை அளிப்போர் இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு

Admin

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும், நேரடியாக சந்திக்கும், ‘தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்’ கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், வேலைநாடும் இளைஞர்களையும், வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார்துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை, இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும், அக்காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்வதற்கும் இந்த இணையதளம் வழி செய்யும்.

இந்த இணையத்தளத்தின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிருமி நானிசி தெளித்த சார்பு ஆய்வாளர் அசோக்குமார், பொதுமக்கள் பாராட்டு

184 விருதுநகர் : மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சார்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அவர்களுடன் இணைந்து மல்லாங்கிணர் பேரூராட்சி முக்கிய வீதிகள் மற்றும் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452