பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை செயல்படும் – விழுப்புரம் புதிய SP சூளுரை

Admin
0 0
Read Time2 Minute, 28 Second

விழுப்புரம் : விழுப்புரத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

 • விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையும் பொதுமக்களும் நல்லுறவேடு செயல்பட முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

  பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தப்படும்பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்கள் குறைகளை கூறுவதற்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.

 • காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களுக்கு நன்மைக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் எடுக்கின்ற நடவடிக்கையாகவே இருக்கும்.

 • விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 • காவல் துறை பொது மக்கள் விரும்பும் துறையாக காவலர்கள் பொதுமக்களின் நண்பர்களாக எப்பொழுதும் இருப்பதற்கான வழிமுறைகள் அமைக்கப்படும்.

 • விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் ஏற்கனவே எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததுபோலவே இப்பொழுதும் ஒத்துழைப்பை விரும்புகிறேன்.

 • காவல் பணி என்பது யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்டுவதிலும் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மட்டுமே இருக்கும்.

 • எந்த ஒரு குற்றச் செயலும் இங்கு அனுமதிக்க முடியாது.

 • சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 • சட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்பாதுகாக்கப்படுவார்கள்.

 • விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிசம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

 • விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை செயல்படும்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏ.எஸ்.பி.யின் உதவியால் நெகிழ்ந்த குழந்தைகள்!

213 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு பகுதியில் உள்ள போலியோ ஹோமில் 30 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் 5 பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆடை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami