3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி

Admin
2 0
Read Time3 Minute, 41 Second

காஞ்சிபுரம் : புதிதாக பதவியேற்ற இருக்கும் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா. சாமுண்டீஸ்வரி. IPS அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது சாராயம் மணல் கொள்ளை போக்சோ போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்ணை 7397001493, 7397001393 DIG அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரெனா பற்றிய தேவைகள் இருக்குமானால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். இந்த இரண்டு தொலைபேசி எண்களும் இதற்கென்று தனி நபர் அமைத்து எனது கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த தொலைபேசியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ரவுடிகள் மாவட்ட ரீதியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள் என்றும், மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், எங்கெங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லையோ, அங்கு விரைவில் வைக்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், பாய்ஸ் கிளப் தொடங்கப்பட்டது இது பயனுள்ள வகையில் இருந்ததாலும் மூன்று மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து அங்குள்ள இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருப்பதற்கு பாய்ஸ் கிளப் தொடங்கப்படும் என்றும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதில் 200 நபர்களுக்கு மேல் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

குண்டாஸ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31, செங்கல்பட்டு 20, திருவள்ளுர் 23, கள்ளச்சாராயம் மணல் கொள்ளை கொலை சேன்ஸ்மோக்கர் குற்றங்களுக்காக குண்டாஸ் போடப்பட்டது. இப்பொழுது பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கும் குண்டாஸ் போடப்படுகிறது என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்களிடம் ஹேட் இன் ஹேண்ட் இந்தியா (Hand in Hand India) சார்பாக முக கவசம், கையுறை மற்றும் முழு கவச உடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கொரனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர்களுக்காக வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமர் மோடி அழைத்து கௌரவித்த 21 வயது DRONE Boy பிரதாப், DEFENSE DRDO பணி வழங்கி கௌரவிப்பு

769 இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். “FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami