இனி காணொளி மூலம்  புகார் அளிக்கும் புதிய திட்டம், சென்னை மக்கள் மகிழ்ச்சி

Admin
Read Time1 Minute, 50 Second

சென்னை : சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட்செவி (Whats App) எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று 03.07.2020 வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட கட்செவி (Whats App) எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார். காணொளி மூலம் மொத்தம் 34 நபர்கள் காவல் ஆணையாளரிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

புகார்கள் பொதுவாக கொடுக்கல் வாங்கல், திருட்டு, நிலஅபகரிப்பு, ஆன்லைன் மோசடி, காசோலை மோசடி, E-Pass, பொது ஊரடங்கு மற்றும் பொது தொல்லைகள் சம்பந்தமாக இருந்தது. மேற்படி புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

 

 

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

 மார்பிங் செய்த புகைப்படங்களை வைத்து பணம் பறித்த இருவர் கைது.

208 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.வருண்குமார் இ.கா.ப அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (94899 19722) தொடர்பு கொண்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami