காலை யோகா பின் திறன் மேம்பாட்டு பயிற்சி, அளித்துவரும் DIG முத்துசாமி, காவல் துறையினர் வரவேற்பு

Admin
1 0
Read Time2 Minute, 36 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் காவலர்களுக்கு மனவலிமையும், உடல்வலிமையும் பெறுவதற்கான பல்வேறு ஆசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் காவலர்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.


திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 45 சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 08.07.2020 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்ட சார்பு ஆய்வாளர்களுக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டு சார்பு ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இப்பயிற்சியில் உரையாற்றிய காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவுடனும், மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
0 %
Sad
0 %
Excited
0 %
Sleppy
0 %
Angry
0 %
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

887 Share on Facebook Tweet it Pin it Share it Email பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami