போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுந்தராவதனம்

Admin

கபசுர குடிநீர் அருந்துவோம் ! கொரானா வைரஸ் இருந்து பாதுகாத்துக் கொள்வோம் !

0 0
Read Time6 Minute, 40 Second

சென்னை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் கிருமி பாதிப்பிலிருந்து நாம் எளிதாக தப்பித்துக் கொள்ளலாம். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.

தற்போது இந்திய நாடு முழுவதும் பரவி வரும் வைரஸ் என்ற கொடிய உயிர்க்கொல்லி கிருமியை தமிழக அளவில், கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 15 மூலிகைகளை பொடியாக்கி குடிநீரில் போட்டு கொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட கபசுரக் குடிநீர் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களுக்கு இலவசமாக போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் முன்னெச்சரிக்கையாக மேற்சொன்னவாறு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் அருந்தலாம்.

கபம் என்றால் சளி. சுரம் என்றால் காய்ச்சல். அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுர குடிநீர் என்பதாகும். இந்த கபசுரத்தில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த்தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக்சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 வகையான அரிய வகை மூலிகைகளை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

கபசுர குடிநீர் தயாரிக்கும் முறையானது முதலில் கபசுர குடிநீர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி (5 கிராம்) வீதம் எடுத்துக்கொண்டு 200 மில்லி அளவு தண்ணீரில் இந்த குடிநீர் சூரணத்தை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் நான்கில் ஒரு பங்காக வரும் வரை (அதாவது 50 மில்லி) காய்ச்சி வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கசாயத்தை தினமும் 2 அல்லது 3 வேளைகள் குடிக்கலாம்.

இந்த கபசுர குடிநீரை 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மில்லி, 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மில்லி, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மில்லி வரை மட்டுமே குடிக்க வேண்டும்.

ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகர் முழுவதும் தெரு தெருவாக சென்று 500 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் மக்கள் தாமாக முன்வந்து வாங்கி சென்று குடிப்பதை காண முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சென்னை மதுரவாயில் போக்குவரத்து ஆய்வாளர் P.M. சுந்தராவதனம் அவர்கள் துவங்கி வைத்தார்.

காவல் துறையில் மிகவும் சவாலான துறை போக்குவரத்து காவல் துறை. ஏனெனில் சிறு தவறு அல்லது கவனக் குறைவால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். போதைப்பொருள் கடத்தல், மது பானங்கள் கடத்தல், செம்மரக்கட்டைகள் கடத்தல் உள்ளிட்ட கடத்தல் வழக்குகளும் கண்டுபிடிக்கவர்கள் போக்குவரத்து காவல்துறையினரே. வாகனங்களுக்கான உரிய ஆவணங்களை பரிசோதித்தல், தகுதி இல்லாத நபர்கள் வாகனத்தை ஓட்டினாலும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டினாலும், பொதுமக்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு போக்குவரத்து காவல் துறைக்கு உள்ளது. மேலும் கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று பாராமல் பணியில் ஈடுபடுபவர்களும் இந்த போக்குவரத்து காவல் துறையினரை. இவர்களுக்கு இவர்களது கடமையை செய்யவிடாமல் தடுக்க குறுக்கிடும் சிபாரிசுகளும் அதிகம்.

இத்தகைய சாவாலான பணியில் பணியாற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுந்தராவதனம் அவர்கள் அங்கு வந்த பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், தங்கள் ஒத்துழைப்பு இல்லாமல், கொரோனா நோய்தொற்று பரவுவதை தடுக்க முடியாது. சிறியவர் முதல் பெரியவர் வரை தவறாமல் அனைவரும் முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் எனவும், மாஸ்க்கை பயன்படுத்திவிட்டு சாலையில் வீச வேண்டாம்,அதனை தகுந்த கவரில் போட்டு கட்டி அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். கொரானா தடுப்பு பணியில் தீவிரமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டு உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.

637 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பூரணம் என்ற முதியவரிடம் தங்க நகையை பறிக்க முயன்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami