892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் காவல் நிலையத்தில் காவலர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், குற்றவாளிகளை கைது செய்யும் போது
கடைபிடிக்க வேண்டிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்
என்றும், வாகன தணிக்கை செயல்பாடுகள் குறித்தும், சோதனைச்சாவடிகளில் செய்ய
வேண்டிய செயல்முறைகள் குறித்தும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் அனைத்து காவல்
அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தெரியபடுத்தும் விதமாக விளக்கம் அளித்தார்
இதில் மாவட்டத்தில் உள்ள 10 துணை காவல் கண்காணிப்பாளர், 29 காவல் ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள், 90 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 700 காவல் ஆளிநர்கள் கலந்துகொண்டனர். 

1. ஊரடங்கு சமயத்தில் ஊரடங்கை மீறுபவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கைது அவசியம் இல்லை.

2. கைது செய்யும் போது கண்டிப்பாக D.K. பாசு v5 மேற்கு வங்காளம் அரசு வழக்கின் தீர்ப்பின்படி கண்டிப்பாக கைது நடவடிக்கைகளை வேண்டும்.

3. 60 வயதிற்கு மேற்பட்டோரை கைது செய்ய அவசியம் இல்லை. மேலும் கொடுங்குற்றங்களை தவிர மற்ற வழக்குகளில் கைது கட்டாயமில்லை.

4. இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் கைதிகளை விசாரணைக்கு அழைத்து வர கூடாது.

5. காவல்துறையினர் பொதுமக்களிடம் கடுமை காட்டாமல் நல்லுறவுடன் நடந்துகொள்ள வேண்டும். சமுதாயக் காவல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

6. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பொருளாதார ரீதியிலும், மன
ரீதியாலும் பாதிக்கப்பட்டிருப்பர். எனவே அவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்.

மேலும் உயர் அதிகாரிகளின் அறிவுரைகள் மற்றும் நீதிமன்ற வழிகாட்டல்களையும்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப
அவர்கள் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி

818 உத்திர பிரதேஷ் : உத்தரபிரதேச மாநிலத்தில் 8 காவல்துறையினரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பித்த முக்கிய ரவுடி விகாஸ் துபேவை தமிழகத்தைச் சேர்ந்த திரு. தினேஷ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452