சென்னையில் 20 துணை ஆணையர்கள், 14 மாவட்ட SP-க்கள்,8 துறை சார் SP-க்கள், 8 பிற மாவட்ட துணை ஆணையர்கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு

Admin

தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காவல் துணை ஆணையர்கள் ஆகியோரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 51 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

 1. சென்னை பெருநகர காவல் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன், IPS பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 2. சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் திரு.ராஜேந்திரன், சென்னை பெருநகர குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 3. சென்னை பெருநகர குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.ஸ்டீபன் யேசு பாதம், சென்னை சி.ஐ.டி.சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 4. திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் திரு.சிபி சக்கரவர்த்தி, சென்னை நிர்வாக மாற்றப்பட்டுள்ளார்.

 5.  சென்னை நிர்வாக ஏஐஜி முத்தரசி, சென்னை கணினிமயமாக்கல் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 6. சென்னை கணினிமயமாக்கல் பிரிவு துணை ஆணையர் திரு. விக்ரமன், அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 7.  திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் திருமதி.நிஷா, சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 8. விரிவாக்கம் பிரிவு ஏஐஜி திரு.பாலகிருஷ்ணன், மாதவரம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 9. நெல்லை வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிஹரன் பிரசாத், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திநகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 10. கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாத், சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 11. பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் திரு. என் குமார் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 12. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன், சென்னை வணிக குற்றத்தடுப்பு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 13. சென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் கிழக்கு திரு.பெரோஸ்கான், சென்னை நிர்வாக துணை ஆணையராக நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளார்.

 14. சென்னை காவல் நிர்வாக துணை ஆணையர் திரு.செந்தில்குமார், சென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் கிழக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 15. கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் திரு.மனோகர், சென்னை காவல் காவலர் நலன் உதவி காவல்துறை தலைவராக (ஏ.ஐ.ஜி) மாற்றப்பட்டுள்ளார்.

 16. சென்னை காவலர் நலன் ஏ.ஐ.ஜி திரு. அதிவீரபாண்டியன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 17. சென்னை தி.நகர் துணை ஆணையர் திரு.அசோக்குமார், சென்னை தலைமைச் செயலகப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 18. சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சேசாங் சாய், மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 19. கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோயில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர் பதவி உயர்வு பெற்று, சென்னை பெருநகர காவல் அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 20. மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு.கார்த்திக், சென்னை பெருநகர பூக்கடை காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்

 1. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அடையாறு துணை ஆணையர் திரு.பகலவன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 2. மாதவரம் துணை ஆணையர் ரவளி பிரியா, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

 3. சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு. பாலாஜி சரவணன், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டுள்ளார்.

 4. திருப்பூர் சட்டம்-ஒழுங்கு எஸ்பி திரு. பத்ரி நாராயணன், கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

 5. தெற்கு சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு. தங்கதுரை, ஈரோடு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 6. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 7. நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் திரு. அருளரசு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக மாற்றப்பட்டுள்ளார்.

 8. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

 9. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

 10. சென்னை பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 11.  திருச்சி எஸ் பி திரு.ஜியாவுல் ஹக்,  கள்ளக்குறிச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

 12. கள்ளக்குறிச்சி எஸ் பி திரு.ஜெயச்சந்திரன், திருச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

 13. மயிலாப்பூர் துணை ஆணையர் திரு.தேஷ்முக் சேகர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

 14. சென்னை உளவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.


துறை சார்ந்த காவல் கண்காணிப்பாளர்கள்

 1. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 2. தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்வரன் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை கடற்படை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 3. திருப்பூர் மாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையர் திரு.பிரகாரன் மதுரை மாவட்ட உணவு பொருள் வழங்கல் உளவு துறை காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 4. சென்னை மாவட்ட குற்றப்பிரிவு உளவுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவி, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு உளவுதுறை -3 காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 5. இராமநாதபுரம் மாவட்ட தலைமை நிர்வாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கவேலு, மாநில மனித உரிமை ஆணைய காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார்.

 6. சென்னை காவல் மாவட்ட வண்டலூர் காவலர் பயிற்சி கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகசாமி, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.

 7. கரூர் மாவட்ட பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தம்பிதுரை பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 8. சென்னை மாவட்ட ஆளுநர் அலுவலக காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.டாங்கர் பவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

துணை ஆணையர்கள்

 1. திருவள்ளூர் பொன்னேரி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பவன் குமார் ரெட்டி ஆக பதவி உயர்வு பெற்று, திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 2. மதுரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி திரு. ஸ்டாலின் கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 3. பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திர சேகரன் பதவி உயர்வு பெற்று சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 4. கோவை மாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையர் திரு.செல்வகுமார் திருப்பூர் மாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 5. திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன்,காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, கோவைமாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்

 6. சேலம் மாவட்ட பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் குமார் பதவி உயர்வு பெற்று திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 7. விருதுநகர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரகாத், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, மதுரை மாநகர காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 8. சென்னை அம்பத்தூர் காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன், Establishment  ஏ.ஐ.ஜி யாக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் எஸ்.கே பிரபாகர்
நேற்று பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொழில் நுட்ப பிரிவு ADGP யாக திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்பு

1,096 சென்னை: காவல் துறையை நவீன மாயமாக்கும் பிரிவான தொழில் நுட்ப பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குநராக திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS  நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452