சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

Admin
0 0
Read Time2 Minute, 19 Second

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 9 நபர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் 10/07/2020 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

பாராட்டுச் சான்றிதழ்களானது ஆழ்துளை கிணறுகளை மூடியதற்காக ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் திரு. முகமது இத்ரீஸ் அவர்களுக்கும், குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த அரியலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. செந்தில்மாறன் அவர்களுக்கும், குற்றவாளிகளை சிறையில் அடைக்க உறுதுணையாக இருந்த அரியலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.உதயகுமார் மற்றும் திரு. நந்தகுமார் ஆகியோருக்கும், மரம் நடுதல் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்ட அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்களுக்கும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அளித்த கயரலாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா, உதவி ஆய்வாளர் திரு. நெப்போலியன் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. ஜீவானந்தம் ஆகியோருக்கும் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உறுதுணையாக இருந்து செயல்பட்ட இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் 20 துணை ஆணையர்கள், 14 மாவட்ட SP-க்கள்,8 துறை சார் SP-க்கள், 8 பிற மாவட்ட துணை ஆணையர்கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு

487 தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காவல் துணை ஆணையர்கள் ஆகியோரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 51 காவல் அதிகாரிகள் பணியிட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami