ஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு

Admin

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் ஏ.டி.எம். மிஸின் வங்கியின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணம் எடுக்கும் வசதியும், பணம் போடும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை கரோனா முழு பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் இன்றி வெளிச்சோடியது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வங்கிக்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.
காலையில் பணம் எடுக்க சென்று பொதுமக்கள் ஏ. டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே வங்கி மேலாளர் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..

154 செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். சென்னையில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் இவரது ஐந்து வயது மகள் கவிஷ்கா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452