துப்பாக்கியுடன் காரில் வந்த 3 பேர் கைது – கோவில்பட்டி போலீசார் தீவிர விசாரணை

Admin
0 0
Read Time1 Minute, 45 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சோதனைச் சாவடியில் நேற்றிரவு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்தனர். அதில் ஒரு துப்பாக்கி , 5 தோட்டா மற்றும் இரண்டு அரிவாள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார், வினோத்குமார் மற்றும் சுரேந்திரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் காரில் ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு செல்வதாகவும், ராஜ்குமார் மீது 3 கொலை வழக்குகள், வினோத்குமார் மீது 2 கொலை வழக்குகள், சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கலைகதிரவன், காவல் ஆய்வாளர் திரு.சுதேசன் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி காவல் நிலையத்தில் வைத்து மூன்று பேரிடம், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது.

534 மதுரை : 2018 ம் ஆண்டு செல்லூர், போஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami