மாற்று திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய சென்னிமலை காவல்துறையினர்

Admin
1 0
Read Time3 Minute, 6 Second

ஈரோடு : தமிழகத்தில் கொரானா கடந்த நான்கு மாதங்களாக பரவிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோரை நாம் இழந்து வருகின்றோம். மக்களை கொரானா நோயிலிருந்து பாதுகாக்கும் உன்னதப் பணியினைஇ நமது காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களும் கொரானா தொற்றுக்கு ஆளாகி பலர் மீண்டு வருகின்றனர். சிலர் மாண்டு வீரமரணம் அடைகின்றனர். கடந்த நான்கு மாத ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, காவல்துறையினரால் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்டம்தோறும் உள்ள காவல் நிலையங்கள் மூலமாக அவ்வப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியோர்க்கு, உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னிமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு எம். செல்வராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னிமலை காவல் நிலையம் சார்பாக சென்னிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொறையன் காடு பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் அவரது வீடுகளிலேயே வழங்கப்பட்டது. மேலும் சென்னிமலை குமரன் சிலை அருகில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி, நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

தன் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் ஒரே துறை காவல்துறை. காவல்துறை சேவையை போற்றுவோம்.


ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

7 வயது சிறுமி கொலை – சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை.!

747 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம்  அருகில் உள்ள கல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது 7 வயது மகள் இன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami