இராமநாதபுரம் புன்னிய ஸ்தங்களுக்குள் மக்கள் நுழைய தடை, காவல்துறை எச்சரிக்கை

Admin
Read Time2 Minute, 18 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புன்னிய ஸ்தங்கள் உள்ளன.

இந்த இடங்களில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் உள் மாவட்டம், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் 144 சி.ஆர்,பி.சி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதாலும், பொதுமக்கள் நலன் கருதி வருகின்ற 20.07.2020-ம் தேதி ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் திதி, தர்பணம் கொடுப்பதற்கும் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காக இராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டிணம், மாரியூர் (சாயல்குடி) மற்றும் பிற கடற்கரையோர இடங்களிலும் சடங்குகள் செய்வதற்கும், மக்கள் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, மேற்படி உத்தரவை மீறி வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஏ.வருண் குமார், இ.கா.ப. அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.


நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

14 வயது சிறுமியை கர்பமாக்கியவனை, பிடித்து சிறையில் அடைத்த காவல் ஆய்வாளர் ஜெயசீல்குமார்

673 தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami