வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்றுக் கொண்ட திண்டுக்கல்  SP  திருமதி.ரவளி பிரியா IPS

Admin
0 0
Read Time1 Minute, 54 Second
திண்டுக்கல் :   தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக சந்தித்து மனு அளிக்கும் குறைதீர்ப்பு முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தங்களது குறைகளை திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவில் இயங்கி வரும் பிரத்தியேக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (9487593100) தங்களது புகார்களை அனுப்பியும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை மேற்படி எண்ணிற்கு (9487593100) பொதுமக்கள் தங்களது புகார்களை வீடியோ கால் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று (20.07.2020) காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை மொத்தம் 21 நபர்கள் (4 பெண்கள் உட்பட) தங்களது புகார்களை வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர். மேற்படி நபர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RACE என்ற புதிய பிரிவு பெரம்பலூர் காவல்துறையில் இணைப்பு

509 பெரம்பலூர் :குற்றங்களை குறைக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் புகார்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க, பல்வேறு வியூகங்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami