அனைவரையும் பாதுகாக்கும் எண்ணத்தில் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் வழங்கினார்

Admin

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பண்ணந்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பண்ணந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ தலைமை வகித்தார், மருத்துவர் இளவரசன், சித்தா மருத்துவர் ஆறுமுகம், காவல் உதவி ஆய்வாளர் ராஜா பண்ணந்தூர் துணை அஞ்சல் அலுவலர் நிரஞ்சன் கவுன்சிலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பண்ணந்தூர் ஊராட்சி துணை தலைவர் சங்கிதாசக்திவேல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் வகையில் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் சூரணம், மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகள் வழங்கினார். மேலும் பண்ணந்தூர் அஞ்சல் நிலையத்தில் புதியதாக 40 பெண்குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் புதிய கணக்கு துவங்கப்பட்டு பெற்றோரிடம் சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கினார்.

மேலும் பண்ணந்தூர் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு கப சூரணம் குடிநீர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய AC எஸ். அனந்தராமன்

209 சென்னை : போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் சைதாப்பேட்டை, கோதம் மேடு, மயிலாப்பூர், சாந்தோம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. அதிகரித்துவரும் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452