குற்றவாளியை விரைந்து கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினருக்கு SP பாராட்டு

Admin

விருதுநகர் : விருதுநகர் கிழக்கடைத்தெருவில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் ரமேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து சென்றுள்ளார்.

இவ்வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் உத்தரவுப்படி, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் அவரகள், தலைமை காவலர் திரு.அழகுமுருகன், முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவகுமார், திரு.பாண்டியராஜன், திரு.அய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காணொளி காட்சிகள் மற்றும் சைபர் க்ரைம் காவல்துறையினர் உதவியுடன் தனிப்படையினர் நடத்திய துரித விசாரணையில், குற்றச்செயலில் ஈடுபட்டது விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த பட்டு என்ற பட்டுராஜா என்பதை கண்டுபிடித்து, மேற்படி நபரை கைது செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் மற்றும் விருதுநகர் தனிப்படை காவல்துறையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

விருதுநகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து சென்ற குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

734 தேனி : மக்கள் பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452